SuperTopAds

ரவூவ் ஹக்கீம் போன்றவர்களின் கடந்தகாலத்தை நாம் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை..! இனிமேலும் அவ்வாறு நடக்க கூடாது..

ஆசிரியர் - Editor I
ரவூவ் ஹக்கீம் போன்றவர்களின் கடந்தகாலத்தை நாம் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை..! இனிமேலும் அவ்வாறு நடக்க கூடாது..

தமிழர்களுக்கு எதிராக ரவூவ் ஹக்கீம் போன்றவர்கள் ஐ.நாவுக்கு சென்றதை நாங்கள் மறக்கவில்லை. மன்னிக்கவும் இல்லை. இனிமேலும் அவ்வாறான ஒரு சம்பவம் நடந்தால் தமிழ்பேசும் இனங்களுக்கிடையிலான விரிசல் நிரந்தரமாகும். 

மேற்கண்டவாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நீதி அமைச்சராக செயற்பட்ட ரவூவ் ஹக்கீம் ஐ.நாவில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையை 

மூடி மறைக்கும் விதத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக கருத்துக்களை வெளியிட்டாவர். இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்குமுறை சம்பவங்களில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பினை பாராளுமன்றத்திலும் 

பொதுவெளியிலும் வெளியிட்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முஸ்லிம் மக்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மத அடக்குமுறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆக்ரோசமன கருத்துக்களை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே வெளியிட்டார்கள். 

இவ்வாறான நிலையில் வரப்போகும் ஐ.நா அமர்வில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு தமிழ் மக்கள் நீதி வேண்டி போராடும்போது இலங்கை அரசாங்கத்தை முஸ்லிம் நாடுகள் ஐ.நாவில் எதிர்காவிட்டாலும் 

நடுநிலையாக செயற்படுவதை முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் இலங்கை அரசை ஐ.நாவில் தொடர்ந்தும் காப்பாற்ற முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் நாடுகளும் முயற்சித்தால்,

முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்மக்கள் தள்ளப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.