சர்வதேச போட்டிகளிலிருந்து தம்மிக்க பிரசாத் ஓய்வு!! -இளைஞர்களுக்கு வழிவிடப்போவதாக தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சர்வதேச போட்டிகளிலிருந்து தம்மிக்க பிரசாத் ஓய்வு!! -இளைஞர்களுக்கு வழிவிடப்போவதாக தெரிவிப்பு-

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் (வயது 37) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் நாளை வியாழக்கிழமை இவ்விடயம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கும் இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன் என்று வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் கூறியுள்ளார்.

இதுவரை தம்மிக்க பிரசாத் விளையாடியுள்ள 25 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும், 24 ஒருநாள் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு