இளைஞனின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் கோடி..! பங்கு கேட்டு கடத்தல் முயற்சி 6 பேர் அதிரடியாக கைது, வடக்கில் தொடரும் மர்மம்..

ஆசிரியர் - Editor I

10 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு பகுதியை தமக்கு தருமாறு கோரியதுடன் கொழும்புக்கு வருமாறு அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த ஆண்டு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மத்திய வங்கியில் இருந்து கதைக்கின்றோம் 

என்று தெரிவித்த சிலர், இளைஞரின் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் கோடி ரூபா அமெரிக்காவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும், அந்தப் பணத்தை எடுப்பதற்கு உதவுகின்றோம் என்று கூறியிருக்கின்றனர்.

வைப்பிடப்பட்ட பணத்தில் 7 ஆயிரத்து 500 கோடியைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும் மிகுதியை இளைஞர் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

அதையடுத்து அந்த இளைஞரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்தக் குழுவோடு இணைந்து கொழும்பில் இருந்துள்ளார். இளைஞரின் கணக்கில் ஒரு லட்சம் கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது என்று கொழும்பில் வைத்து அந்தக் குழு பணத்தொகையை அதிகமாகக் கூறியிருக்கின்றது.

ஆனாலும் பணம் இளைஞரின் கைக்கு வராததை அடுத்து அவர் கொழும்பில் இருந்து கிளம்பி வவுனியா வந்துவிட்டார்.

அதன்பின்னர் நேற்று அந்த இளைஞரை அந்தக் குழு தொடர்பு கொண்டுள்ளது. அந்தப் பணத்தை எடுக்க கொழும்பு செல்ல வேண்டும் என்று தெரிவித்து இளைஞரை கொழும்பு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளது.

அஇளைஞர் அவர்களுடன் செல்ல மறுப்புத் தெரிவித்து முரண்பட்டுள்ளார். இளைஞரின் நண்பர் இந்த விடயத்தை வவுனியா பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், இளைஞரை அழைத்துச் செல்ல வந்திருந்த 6 பேரையும் கைதுசெய்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பயன்படுத்திய 3 சொகுசு வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், இந்த விடயம் தொடர்பாக மத்திய வங்கிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இளைஞரைக் கடத்திச் செல்ல முயன்றனர் என்ற கோணத்தில் 6 பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று அந்தக் குழு தெரிவித்தபோதும், 

அந்தப் பணம் எங்கிருந்து, எவ்வாறு வந்தது என்பது இளைஞருக்குத் தெரியவில்லை. இது ஏதேனும் நூதனமான ஏமாற்று முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு