SuperTopAds

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு..! அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படும் என்கிறார் அமைச்சர்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக மரண சடங்குகளை 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் 

அதனை 50 ஆக மீண்டும் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் 

எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.