சதம் விளாசினார் அஸ்வின்!! -இங்கிலாந்துக்கு 482 ஓட்டங்கள் வெற்றி இலக்கு-

ஆசிரியர் - Editor II
சதம் விளாசினார் அஸ்வின்!! -இங்கிலாந்துக்கு 482 ஓட்டங்கள் வெற்றி இலக்கு-

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார். 

இப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நாணயசுழல்ச்சியில் வென்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்சில் 329 ஓட்டங்களை பெற்றது. 

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் 134 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்களை எடுத்தது. 

3 ஆம் நாள் ஆட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து 7 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

குறிப்பாக அஸ்வின் துரிதமாக ஓட்டங்களை எடுத்தார். விராட் கோலி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். விராட் கோலி 62 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ஓட்டங்களும், இசாந்த் சர்மா 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக அஸ்வினுடன், சிராஜ் ஜோடி சேர்ந்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இது அவருடைய 5 ஆவது டெஸ்ட் சதமாகும்.

தாடர்ந்து ஆடிய அஸ்வின் 106 (148 பந்துகள்) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முகமது சிராஜ் 16 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் இந்திய அணி 85.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்களை எடுத்தது. இதன்படி இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 481 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு