புதியவகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பயண கட்டுப்பாடு..! வவுனியா உள்ளிட்ட 4 பிரதேசங்கள்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் புதியவகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பயண கட்டுப்பாடுகளை நடவடிக்கை எடுக்கப்படும். என விசேட வைத்திய நிபுண் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தொிவித்திருக்கின்றார். 

குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் இதன்போது தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, 

வவுனியா மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு