கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (20) முற்பகல்- 10.30 மணி முதல் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் கேட்டுள்ளார்.