வடமாகாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று..! பூநகரி- வலைப்பாட்டில் 10 பேருக்கு தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளர்.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்(5 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள்), மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குமாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் 12 பேர் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள். என பணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூநகரி - வலைப்பாடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் 

தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர் எனவும், வவுனியா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்

எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு