யாழ்ப்பாணம் விஜயம் செய்த 1வது வெளிநாட்டு பிரதமர் நானே..! ஈழ தமிழர்களின் கண்ணியமான, அமைதியான வாழ்க்கையை இந்தியா உறுதி செய்யும்..

ஆசிரியர் - Editor I

ஈழ தமிழர்களின் சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி, அமைதியான வாழ்க்கையை உறுதி செய்வதில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கிறது. என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கின்றார். 

தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்காக வருகைதந்திருந்த பிரதமர் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் அரசு எமது அரசு. இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது இந்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது. 

இலங்கைத் தமிழர்களின் நலன் தொடர்பில் அந்த நாட்டுத் தலைவர்களிடம் வலியுறுத்தும் அரசு எமது அரசு. இலங்கைத் தமிழர்கள் அமைதி, கண்ணியம், சமத்துவத்துடன் வாழ்வதை உறுதி செய்வோம்.

இடம்பெயர்ந்த வடகிழக்கு தமிழர்களுக்க 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்ப்பட்டுள்ளது. மலையக தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா உதவி செய்துள்ளது.

 யாழ்ப்பாணம் தமிழகம் இடையே விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கட்டி கொடுத்த யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. நமது மீனவர்கள் நீண்டகாலமாக பிரச்னை சந்தித்து வருகின்றனர். 

தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கும் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால், மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளோம். 

1,600 மீனவர்களை மீட்டுள்ளோம். தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் இல்லை. மேலும் மீனவர்களில் 312 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு