SuperTopAds

நோய் கொடுமை தாங்காது தம்பதி தற்கொலை!!

ஆசிரியர் - Editor II

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் உரக்கடை ஒன்றை 55 வயதான தண்டபாணி, 46 தமிழரசி என்னும் தம்பதியினர் நடத்தி வந்துள்ளனர். 

அவர்களுக்கு பிரியங்கா (வயது 20) என்ற மகளும், செல்வம் (வயது 17) என்ற மகனும் உள்ளனர்.

மகள் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகனும்  கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் குறித்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் தண்டபாணி அவதிப்பட்டார். இதற்காக அவர், பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருதய அறுவை சிகிச்சை செய்தும் அவருக்கு நோய் குணமாகததால் அவர் அவதிப்பட்டுவந்துள்ளார். 

தன் கண்ணெதிரே  கணவர் நோயால் கஸ்டப்படுவதை கண்டு மனைவி மனம் நொந்து போனார். நோய் கொடுமை தாங்க முடியாததால் கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் 2 பேரும், எலிமருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.