இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்!! -ரோகித் சர்மா 7 ஆவது சதம் அடித்து அசத்தல்-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்!! -ரோகித் சர்மா 7 ஆவது சதம் அடித்து அசத்தல்-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது. இப்போட்டியில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் கோலி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் சுப்மான் கில் ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

இதையடுத்து, ரோகித் சர்மாவுடன் - புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா வழக்கம் போல தடுப்பாட்டம் ஆட ரோகித் சர்மா சற்று அதிரடியாக ஆடினார் நிதானமாக ஆடி வந்த புஜாரா 21 ஓட்டங்களில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.  

4 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அணித்தலைவர் கோலி, மோயின் அலி சுழலில் சிக்கி போல்டு ஆனார். 86 ஓட்டங்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

இதனை தொடர்ந்து, ரோகித் சர்மாவுடன் அணியின் துணைத்தலைவர் ரகானே ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் ரகானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதால், ஓட்ட வேகம் சீராக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 7 ஆவது சதம் இதுவாகும்.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு