வடமாகாணத்தின் இரு மாவட்டங்களில் புதிய கொவிட்-19 வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது..! துரித ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு..

ஆசிரியர் - Editor I

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் 4 பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் புதிய வகை கொரோனா தொற்று தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தொிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் 

வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய மாறுபாட்டின் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு