SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து..! சுகாதார பிரிவு தீவிர நிலையில், யாழ்.மாவட்ட செயலர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் புதிதாக ஒரு கொத்தணி உருவாகும் ஆபத்துள்ள நிலையில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுமாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

யாழ்ப்பாணம் - அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தற்போதுள்ள நிலையில் அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், குறித்த தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் 

சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.அத்தோடு இன்றையதினம் அச்சுவேலி சந்தையுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் 

எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே சந்தை மூடுவதற்குரிய தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.