SuperTopAds

வடமாகாண மக்கள் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக அச்சமடையவேண்டாம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்கள் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக அச்சமடையவேண்டாம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் விளக்கம்..

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நபர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சைப்பிரஸ் நாட்டவர். என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

உள்ளூரைச் பொதுமக்களிடம் ஏற்பட்ட தொற்றில் அந்த வகை வைரஸ் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவும், சமூக மட்டத்தில் புதிய வைரஸ் தொற்று ஏற்படவில்லை. எனவும் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

பிரிட்டனில் பரவிவரும் கொரோனா வைரஸின் அதிக பரிமாற்றத்தைக் கொண்ட பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன என்று 

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவர் சந்திம ஜீவானந்திர அறிவித்திருந்தார். அதுதொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஆ.கேதீஸ்வரன், மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.“சைப்ரஸிலிருந்து வருகை தந்தோருக்கு 

பிரிட்டனில் பரவும் வைரஸின் பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான புதிய மாறுபாடு தொற்றுள்ளமை ஒருவாரத்துக்கு முன்பாக கண்டறியப்பட்டது.அவர்கள் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 

அதுதனாலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் வவுனியாவும் உள்ளடங்குகிறது.உள்ளூர் மக்கள் எவருக்கும் இந்தப் புதிய வகை வைரஸ் இல்லை என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.