SuperTopAds

மத வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார்..! ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு பரிந்துரையாம்..

ஆசிரியர் - Editor I

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டில் மத வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என மோர்னிங் தெரிவித்துள்ளது.

2014இல் அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளி;ற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே 

ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என நம்பகதன்மை மிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

மதமற்றும் இனரீதியிலான  குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட- உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.