SuperTopAds

ஒரு ஏக்கருக்கு மேல் காணி உள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம்..!

ஆசிரியர் - Editor I

நாடு முழுவதும் ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும். என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் அது திருத்தப்பட்டு 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டது.

பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் ஒரு ஏக்கர் அல்லது அதற்கு கூடியதாகவே விவசாய நிலத்தை கொண்டுள்ளனர் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.