வடக்கில் கொரோனா சமூக தொற்றா..? 3 மாவட்டங்களில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற 4 பேருக்கு தொற்று உறுதி, யாழ்ப்பாணத்தில் பேருந்து நடத்துனர்..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தில் இன்றைய தினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளான பலர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையிலேயே கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 3 போில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றய இருவர் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது அங்கு சந்தேகத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான வலைப்பாடு பகுதியை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நிலையில் அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் யாழ்.மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் யாழ்.மாவட்ட செயலகம் - யாழ்.நகரம் இடையில் ஈடுபடும் குறுந்துார பேருந்து சேவை பேருந்து ஒன்றின் நடத்துனர் எனவும் அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில்

அங்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் வவுனியா - பறையனாளங்குளம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் என மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு