SuperTopAds

அரச ஊழியர்களுக்கு பேருந்து சாரதியாக மாறிய பிள்ளையான்..! பாதுகாப்பாக கொண்டு சென்றாராம்..

ஆசிரியர் - Editor I

பாதை சீரின்மையினால் பேருந்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாதென சாரதி கூறிய நிலையில் நடுவில் நின்ற அரச ஊழியர்களுக்கு பேருந்து சாரதியாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அரச ஊழியர்களை பாதுகாப்பாக சேரவேண்டி இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். 

மாயவட்டை பேரில்லாவெளி எனும் இடத்தில் மாவெட்டுவான் அணைக்கட்டுக்கு அடிக்கல் நாட்ட நேற்று முன்தினம் (09.02.2021) சென்ற போது, அந்த நிகழ்வுக்கு சமுகமளிக்க வந்த அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றி வந்த பஸ் வண்டியின் சாரதி 45 நிமிடமாக பாதை சரியின்மை காரணமாக பஸ்ஸை இடைநடுவில் நிறுத்தி வைத்திருந்தார்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அந்த சாரதியிடம் ஏன் வாகனத்தினை நிறுத்தி வைத்துள்ளீர்கள் எனக்கேட்டபோது அதற்கு அவர் 'இந்த பாதை சரி இல்லை இந்த அலுவலர்கள் எல்லோரும் அடிக்கல் நடும் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

இதனை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சி. சந்திரகாந்தன் நான் மிகவும் பாதுகாப்பாக அவர்களை அந்த இடம் சேர்ப்பேன் ஏறுங்கள் எனக்கூறி அவர் பஸ் சாரதியாக மாறினார். அனைவரையும் குறித்த இடம் வரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார். பாராளுமன்ற உறுப்பினரின் முன்மாதிரியை மக்கள் பெரிதும் பாராட்டினர்.