வடமாகாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.பல்கலைகழக மாணவர்கள், HNB வங்கி ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று 776 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 10 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களில் யாழ்.பல்கலைகழக கலைப்பீட மற்றும் நுண்கலைப்பீட மாணவர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னார் HNB வங்கியின் ஊழியர்கள் 5 பேருக்கும், 

நாணாட்டான் பிரதேச செயலக ஊழியர்கள் 3 பேருக்கும், கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் உள்ளடங்கலாக 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு