சிவலிங்கத்தை ஒத்த கட்டிட இடிபாடுகள் குருந்துார் மலையில் மீட்பு..! தொல்லியல் திணைக்களம் மௌனம்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - குருந்துார் மலையில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டிருக்கின்றது. 

தண்ணிமுறிப்பு - குருந்துார் மலையில் தொல்லியல் திணைக்களத்தினால் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் அங்கு தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் கட்டிட இடிபாடுகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

அவற்றில் சிவலிங்கத்தை ஒத்ததான இடிபாடுகளே காணப்படும் நிலையில் தொல்லியல் திணைக்களம் அது குறித்து ஒரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை. 

எனினும் குறித்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் காலத்திற்குரிய எட்டுப்படை (எட்டு முகம்) தாரா லிங்கம் என

வரலாற்று ஆய்வாளர் NKS திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு