P2P போராட்டம் தொடர்பில் அமெரிக்க தூதர் கருத்து..! நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தல்..
"P2P" போராட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்த ஜனநாயகத்திலும் முக்கியமான விடயம் நியாயபூர்வமான கோரிக்கைகள் செவிமடுப்பது முக்கியமானது எனவும்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணி குறித்து தமிழ்ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது குறித்து அறிந்தேன்,
கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.