யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி மரணம்..! வேலணை பகுதியை சேர்ந்தவர், வடக்கில் 4வது மரணம் பதிவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 1வது நோயாளி உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணை பகுதியை சேர்ந்த 73 வயதான முதியவர் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ஸ்ரோக் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிக்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. 

பின்னர் அனுராதபுரம் கொரோனா சிகிச்சை நிலையத்திற்று மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் எனினும் அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. 

எனினும் சிகிச்சை பயனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கொரோனா சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் ஒருவரும் மன்னாரில் இருவரும் என மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு