நீதிமன்ற தடையுத்தரவை மீறியோர் மீது விசாரணை..! பொத்துவில் முதல் பொலிகண்டிவரை போராட்ட விடயத்தில் பொலிஸார் விடாப்பிடி..

ஆசிரியர் - Editor I

நீதிமன்ற தடையுத்தரவை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகரியினால் மாவட்ட நீதிமன்றில் பி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவுப் பொலிசாரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த B அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ,வினோ நோகராதலிங்கம், துரைராசா ரவிகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் மதத்தலைவர்களின் பெயர்களும் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள்,

சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்கு பற்றமுடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்த நிலையில் கடந்த 05 .02.2021 அன்று பேரணி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு