நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டது ஏன்..? சுமந்திரன் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து வழங்கப்பட்டுவந்த விசேட அதிரடிப் படை பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கின்றது. 

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் மீளப்பெறப்பட்டுள்ளது. எனினும் காரணம் எதுவும் கூறப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து 

பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 

பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு