பொலிகண்டியில் நடந்த குழப்பம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதா..?

ஆசிரியர் - Editor I

பொலிகண்டியை உச்சரித்து ஆரம்பமான சாத்வீக போராட்டம் தமது ஊரிலேயே நிறைவடைய வேண்டும். என பொலிகண்டி மக்களின் கோரிக்கையின்போது குழப்பம் விளைவித்த சிலரால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் வாகனத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளிற்கு ஆரம்பமான போராட்டம் பொலிகண்டியையும் தாண்டி அடுத்த கிராமத்திற்கு செல்வதனால் தமது கிராமத்திலேயே நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டதன் பெயரில் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் பொலிகண்டியின் ஆலடியில் இதன் நினைவாக கல் ஓன்று நாட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இ. சாணக்கியன், கலையரசன் ஆகியோரை வழிமறித்து இதற்கு அப்பால் பயணிக்க விடமாட்டோம். என இளைஞர்கள் சூழ்ந்தனர்.

இதனால் இந்த இடத்திற்கான கல்லினை கண்டிப்பாக நாட்டி வைக்கப்படும். ஆனால் ஒற்றுமை கருதி எம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதேநேரம் பொத்துவிலில் போராட்டம் ஆரம்பிக்கும்போது நின்ற 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாசும் இங்கே வந்துள்ளோம். ஆனால் இடையில் வந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்று விட்டனர். 

இருப்பினும் ஒற்றுமைக்காக பேரணி செல்லும் இடத்திற்கு செல்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு சிலர் ஏற்றுக்கொண்டாலும் மேலும் சிலர் அதனையும் ஏற்க மறுத்தமையால் சாணக்கியன் பொலிகண்டி ஆலடி நிகழ்வில் கலந்துகொண்டார். 

ஆலடி நிகழ்வு நிறைவுபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் புறப்படத் தயாரான சமயம் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரின் உறவு ஒருவர் வந்து மேலும் குழப்பத்தை விளைவித்ததோடு வாகனம் மீது கையால் தாக்கினார். இதன்போது ஒருவர் சாணக்கியனின் வாகனம் மீது போத்தலால் வீசியதனால் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது. 

இருந்தபோதும் பொலிகண்டி வாழ் மக்களின் கோரிக்கையின் பெயரில் அந்த இடத்தில் சாணக்கியனால் பேரணி நினைவாக ஓர் கல் நாட்டப்பட்டதுடன் நிறைவு இடத்தில் பேரணியின் எழுச்சி உரையும் வாசிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு