ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது..! சாத்வீக போராட்டத்தில் இணைந்துகொண்டு மனோ கருத்து..

ஆசிரியர் - Editor I

இந்தநாடு சிங்கள பௌத்த நாடு மாத்திரமல்ல, தமிழ், முஸ்லிம், இந்து,ஸ்லாம் கத்தோலிக்கம் என எல்லா இன மதங்களை உள்ளடக்கிய நாடாகும்.இந்த பன்மைத் தன்மையை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

அதை விடுத்து கோட்டாபய சொல்வதைப்போல ஒரே நாடு, ஒரேசட்டம், ஒரே இனம், ஒரேமொழி, ஒரே மதம் என்றால் எங்களால் சிரிக்கவே முடியும்.ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். 

இச் சிரிப்பு எக்காள, ஆணவச் சிரிப்பல்ல உண்மையான சிரிப்பு, நியாயமான சிரிப்பாகும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். துணுக்காய், கல்விளான் பகுதியில் 

"பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை" என்னும் எழுச்சிப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கை பல மொழிகள் பேசப்படும் பல மதங்கள் கடைப்பிடிக்கப்படும், பல இனங்கள் வாழுகின்ற பன்மைத்தன்மைவாய்ந்த நாடு. இந்த கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூச்சல் எழுப்புகின்றது.

இவ்வாறு கூச்சல் எழுப்பும்போது ஒரே மொழி, ஒரேமதம், ஒரே இனம் என்று நீண்டுபோயிருக்கின்றது.அதை எக்காலத்திலும் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். 

இந்த நாட்டில் எமக்கு வரலாற்றுரீதியாக சொந்தம் இருக்கின்றது. உரிமை இருக்கின்றது.இந்தநாடு சிங்கள பௌத்த நாடு மாத்திரமல்ல, தமிழ், முஸ்லிம், இந்து,ஸ்லாம் கத்தோலிக்கம் என எல்லா இன மதங்களை உள்ளடக்கிய நாடாகும்.

ஆகவே இந்தப் பன்மைத் தன்மையை இந்த அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும்.அதை விடுத்து ஒரு இனத்திற்கும், ஒரு மதத்திற்கும் மாத்திரம் சொந்தமான நாடு என்ற நிலையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோட்டாபய சொல்வதைப்போல ஒரே நாடு, ஒரேசட்டம், ஒரே இனம், ஒரேமொழி, ஒரே மதம் என்றால் எங்களால் சிரிக்கவே முடியும். அவ்வளவுதான்.ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து நான் சிரிக்கின்றேன்.

இச் சிரிப்பு எக்காள, ஆணவச் சிரிப்பல்ல உண்மையான சிரிப்பு, நியாயமான சிரிப்பாகும்.அந்த நியாயத்தினை நாடுமுழுக்க எதிரொலிக்க வைக்கும் ஒரு ஜனநாயக நடைப் பயணம்தான் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அன்றும், இன்றும், எப்போதும் நான் எங்கள் கட்சி சார்பாக எப்போதுமே அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றேன். குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பேன். அந்தவகையிலேதான் இப்போது இங்கே எங்களது உடன் பிறப்புக்களுடன் 

இணைந்து எனது இந்த ஒற்றுமை, ஐக்கியத்தினை அடையாளப்படுத்துவதற்காக நான் இங்கே நின்றுகொண்டிருக்கின்றன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு