சதமடித்து உலக சாதனைகள் முறியடித்த ஜோ ரூட்!! -சென்னையில் இன்று பதிவு செய்தார்-

ஆசிரியர் - Editor II
சதமடித்து உலக சாதனைகள் முறியடித்த ஜோ ரூட்!! -சென்னையில் இன்று பதிவு செய்தார்-

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் பல்வேறு உலக சாதனைகள் படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழல்ச்சியல் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களை பெற்றது. 

இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்தார். இதன்மூலம் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். 

குறிப்பாக 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிக்சர் விளாசி இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு