27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டது..! புதிய விலைப்பட்டியல் வெளியானது..
இலங்கையில் நாளை மறுதினம் திங்கள் கிழமை தொடக்கம் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது. புதிய விலை நிர்ணயம் எதிர்வரும் 3 மாதகாலத்திற்கு நிலையாக பேணப்படும். இடையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது.
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக உள்ளது.
தனியார் தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்துக்கமைய,
சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 93 ரூபா
வெள்ளை அரிசி ஒரு கிலோ 93 ரூபா
வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ 96 ரூபா
சம்பா ஒரு கிலோ 99 ரூபா
கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 125 ரூபா
கோதுமை மா ஒரு கிலோ கிராம் 84 ரூபா
வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 99 ரூபா
சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம்125 ரூபா
தேயிலை தூள் 100 கிராம் பெக்கட் 95 ரூபா
சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 165 ரூபா
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபா
உருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம் 180 ரூபா
உருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் 140 ரூபா
கடலை ஒரு கிலோகிராம் 175 ரூபா
உலர் மிளகாய் ஒரு கிலோ கிராம் 495 ரூபா
டின் மீன் 425 கிராம் 220 ரூபா
டின்மீன்(இறக்குமதி)265 ரூபா
நெத்திலி 1கிலோகிராம் 575 ரூபா
கோழியிறைச்சி ஒரு கிலோகிராம் 400 ரூபா
உப்பு ஒரு கிலோகிராம் 43 ரூபா
பால்மா 400 கிராம் 355 ரூபா
சோயா எண்ணெய் 500 மி.லீ.310 ரூபா
ஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் 43 ரூபா
பார் சவர்காரம் 650 கிராம் 260 ரூபா
வாசனை சவர்காரம் 100 கிராம் 56 ரூபா
பற்பசை 250 ரூபா
முகக்கவசம் 14 ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விலையின் அடிப்படையில் சதோச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் 27 அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே தடவையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைப்பினை 3 மாத காலத்துக்கு பிறகும் அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.