எவன் தடுத்தாலும் பொத்துவிலில் பிறந்த சாத்வீக போராட்டம் பொலிகண்டியை அடையும்..! இனத்தால் அதற்கே உரித்தான மானத்தால் ஒன்றுபடுங்கள்.. சுகாஸ் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
எவன் தடுத்தாலும் பொத்துவிலில் பிறந்த சாத்வீக போராட்டம் பொலிகண்டியை அடையும்..! இனத்தால் அதற்கே உரித்தான மானத்தால் ஒன்றுபடுங்கள்.. சுகாஸ் அழைப்பு..

தமிழ் இனத்தின் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தரும் சட்டதரணியுமான கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்தார்.

பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான சாத்வீக வழி போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தொரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கும் வகையிலும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் என இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் பிரித்தாளும் தந்திரோபாய முறையில் அவர்களுக்கு எதிராக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குகிறோம் என ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களால் ஏமாற்றுகிறார்கள்.

அதேபோல் முஸ்லிம் சகோதரர்களின் ஐனாசாக்களை அவர்களின் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில்  அடக்கம் செய்ய விடாது தடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக தொல்பொருள் திணைக்களங்கள் மூலம் தமிழர்களின் வரலாறுகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன் வரலாறுகளை திட்டமிட்டு திரிவு படுத்தி வருகின்றனர்.

தமிழ் இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப் போரில்  நடந்த இனப்படுகொலை மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

அதற்காகவே பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது அகிம்சை போராட்டமானது ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளையும் தாண்டி யாழை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய இணைந்த நாட்டுக்கள்  வடக்கு கிழக்கு தனியாலகாக பிரகடனம் செய்யும் வரை எமது பிரச்சினைகள் தீரப் போவதுமில்லை எமது போராட்டம்   ஓயப் போவதும் இல்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு