வடமாகாணசபை நிபுணர் குழு அறிக்கையே சுன்னாகம் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை நிறுத்த காரணம்..!
வடமாகாணசபை நிபுணர் குழு அறிக்கையினாலேயே சுன்னாகம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.
சுன்னாகம் பகுதியில் கழிவு ஓயில் தாக்கம் இருக்கிறது. என தெரிவிக்கப்படும் நிலையில் ஏன் அந்த மக்களுக்கான நீர் விநியோகத்தை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நிறுத்தியது என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கேள்வி எழுப்பினர்.
இதன்போது பதிலளித்த துறை சார்ந்த அதிகாரி 2016 ஆம் ஆண்டு நிலத்தடி நீரில் கழிவு ஒயில் தாக்கம் இருக்கிறது என நிரூபிக்கப்பட்ட நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தம்மால் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் வடக்கு மாகாணசபை நியமித்த நிபுணர் குழு குறித்த பகுதியில் ஒயில் தாக்கம் இல்லை என அறிக்கை தந்ததால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமக்கு வழங்கிய நிதியை நிறுத்தியதாகவும்
இதனால் மக்களுக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக தெரிவித்தார்.