இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து கிளிநொச்சியிலும் உறவுகள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பாரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

 குறித்த போராட்டத்தில் பல்வேறு குாரிக்கைகளும் முன்வைத்து கோசங்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த புாராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றம் அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்ததிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு