யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளையும் ஆக்கிரமித்து விகாரை..! தமக்கு தொியாது என்கிறது தொல்லியல் திணைக்களம், சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் ஆலோசனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளையும் ஆக்கிரமித்து விகாரை..! தமக்கு தொியாது என்கிறது தொல்லியல் திணைக்களம், சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் ஆலோசனை..

யாழ்.மாவட்டத்தில் 6 இடங்களை தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த இடங்களாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட முயற்சிக்கப்படுவது தொடர்பாக தமக்கு எதுவும் தொியாது. என யாழ்.மாவட்ட தொல்லியல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இன்று ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணை தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் கூறப்பட்டுள்ளது. 

இன்றைய கூட்டத்தின்போது வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் யாழ்.மாவட்டத்தில் 6 இடங்களை தொல்லியல் முக்கத்துவம்வாய்ந்த இடங்களாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடவுள்ள விடயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தமக்கு அவ்வாறான எதுவும் தொியாதெனவும், கொழும்பிலிருந்தே சகல உத்தரவுகளும் வருவதாக கூறியிருக்கின்றனர். இந்நிலையில் வலி,வடக்கில் வீமன்காமம் மற்றும் தையிட்டி

கிராமங்களில் இரு விகாரைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த விகாரைகள் தனியார் நிலத்தையும் ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளதாகவும், விகாரை கட்டுமானத்திற்காக அனுமதி கேட்டு பிரதேசசபையிடம் விண்ணப்பித்துள்ளபோதும் தமது அனுமதிக்கு முன்பே, 

விகாரை அங்கு கட்டப்பட்டுள்ளதையும் தவிசாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த இணை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனியார் காணியல் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், பிரதேசசபையின் அனுமதி பெறப்படாவிட்டால் 

அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு பிரதேசசபைக்குள்ள சட்டரீதியான அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்றில் வழக்கு தொடருமாக ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் அதற்கான முயற்சிகளை தாம் எடுத்துள்ளதாக தவிசாளர் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு