யாழ்.மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுக்கு காணி வாங்க 7லட்சம், வடமாகாணத்தில் நுண்நிதி கடனில் சிக்கிய மக்களை மீட்க இலகு கடன்..

ஆசிரியர் - Editor I

வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் ஆகியவற்றில் நுண்நிதி கடன்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்றாக இலகு கடன் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிரக்கின்றது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 6 மாவட்ட செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணத்துக்கு 292 மில்லியன் ரூபாய்களும் வடமத்திய மாகாணத்துக்கு 250 மில்லியன் ரூபாய்களும் அடங்கலாக 

மொத்தம் 542 மில்லியன் ரூபாய் நிதி சுழற்சிமுறை நிதியாகப் பயன்படுத்தப்படுகிறது.கடன் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு சலுகை வழங்குவதற்கு குறித்த சுழற்சிமுறை நிதியைப் பயன்படுத்தி கடனுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் 

அதன்கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகையை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கும் குறித்த கடன் திட்டத்துக்கான அதிகபட்ச வருடாந்த வட்டி வீதத்தை 9 சதவீதத்திலிருத்து 6 சதவீதத்துக்கு குறைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு 

இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

தங்களது பிறந்த இடத்துக்கு அண்மையாக காணி வழங்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் கோரும் இடங்களில் 7 லட்சம் ரூபாய் பெறுமதிக்கு 20 பேர்ச் காணித்துண்டைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு அமைய 10 தொடக்கம் 20 பேர்ச் காணித்துண்டை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும் தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான 

பொறிமுறையை தயாரித்து இடம்பெறந்த குடும்பங்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு