SuperTopAds

துப்பாக்கி சூட்டுக்கு காயங்களுடன் இளைஞன் மீட்பு..! தீவிர விசாரணையில் பொலிஸார், இராணுவம்..

ஆசிரியர் - Editor I

செட்டிகுளம் - முசல்குத்தி பகுதியில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்குசென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் வயது 36 என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டைமேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.