யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கள்ளர்கள், ரவுடிகள் அட்டகாசம்..! வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்ததால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி கிழக்கு - அம்மன் பகுதியில் மணல் கள்ளர்கள் மற்றும் ரவுடிகள் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி சென்றுள்ளனர். இதனால் நேற்றய தினம் இரவு முழுவதும் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  நாகர் கோவிலில் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உழவு  இயந்திரத்தில் கள்ள மணல் ஏற்றி ரிப்பர்  வாகனங்களுக்கு விநியோகிக்கும் நபர் ஒருவருக்கும், 

அம்பன் கிழக்கை சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சட்டவிரோத மணல் கள்ளர்கள் வாள்வெட்டு குழு ரவுடிகளை அழைத்து வந்து அம்பன் வாசி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் நேற்றும் இரு தரப்பிற்கிடையிலான மோதல் நீடித்த நிலையில் நேற்றய தினம் இரவு 8.45 மணியளவில் சுமார் 15ற்கும் மேற்பட்டோர் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தியதுடன்,

தாக்குதலும் நடத்திய நிலையில் மக்கள் வீடுகளை விட்டு ஓடி மறைந்திருந்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு 8:45 மணியளவில் கிராம மக்களால் அறிவிக்கப்பட்டபோதும்,

2 மணி நேரம் தாமதித்தே பொலிஸார் வந்துள்ளனர். மேலும் தாம் 3 உத்தியோகஸ்த்தர்களே வந்துள்ள நிலையில் தம்மால் பாதுகாப்பு நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாதெனவும் மக்கள் முறைப்பாடும் பதிவு செய்யவில்லை. 

என கூறி திரும்பி சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு