இந்திய பெண்கள் அணித் தலைவர் மிதாலி ராஜ் வாழ்க்கை படமாகிறது!! -கிரிக்கெட் பயிற்சியில் நடிகை டாப்சி-

ஆசிரியர் - Editor II
இந்திய பெண்கள் அணித் தலைவர் மிதாலி ராஜ் வாழ்க்கை படமாகிறது!! -கிரிக்கெட் பயிற்சியில் நடிகை டாப்சி-

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இந்நிலையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள டாப்சி தற்போது மும்முரமாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார்.

விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாகின்றன. இந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. 

மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் அவரது கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க டாப்சி தற்போது கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு