இந்தியா திரும்பியதும் முதலில் தந்தையின் கல்லறைக்கு சென்ற முகமட் சிராஜ்!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமட் சிராஜ் இன்று வியாழக்கிழமை காலை இந்தியா திரும்பியவுடன் நேரடியாக தனது தந்தையின் கல்லறைக்கு சென்றுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தனது தந்தை முகமட் கவுஸின் கல்லறைக்கு சிராஜ் சென்றுள்ளார். நுரையீரல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த சிராஜின் தந்தை சிராஜ் அவுஸ்திரேலியா சென்ற ஒரிரு நாட்களில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.