SuperTopAds

போர்குற்றவாளிகளை இலங்கை தண்டிக்காது சீ.வி

ஆசிரியர் - Editor I
போர்குற்றவாளிகளை இலங்கை தண்டிக்காது சீ.வி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? என கேட்டதற்கு அவர்கள் இறந்திருக்கலாம், இறந்துவிட்டார் கள் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலு வலகம் தொடங்குகிறார்கள். இதன் ஊடாக வெளிப்படும் உண்மை போர் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள்  ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள். மாறாக காப்பாற்றுவார்கள் என்பது மட்டுமே.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், இலங்கையை சர்வN தச விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பிரேணை கொண்டுவந்தோம். என கூறும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அழு த்தம் கொடுக்கவேண்டும். இதனை 2015, 2017ம் ஆண்டுகளிலும் நாம் கூறியுள்ளோம். எனவும் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதி க்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக் கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போ தே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், போர்குற்ற

ங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்க ளை தண்டிக்காது. மாறாக அவர்களை மன்னிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் காணாமல்போனவர்க ளுக்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் எ னவும், இறந்துவிட்டார்கள். எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமல்போன

வர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆகவே ஒரு மக்கள் கூட்டத்தி ற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதi ன இலங்கை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவார்கள். அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இரு

க்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அ மையாது. எனவே நான் 2015ம் ஆண்டும், 2017ம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன். மேலும் இலங்கை தொ

டர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத் திற்கு கொண்டுவந்தது. அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டுவந்த தாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள். அதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தi

ம போன்ற பல்வேறு பூகோள நிலமைகளை கருத்தில் கொண்டே பிரேணை கொண்டுவந்தார்கள். ஆன hல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் என பாசாங்கு செய்தாலும் அ வாகளுக்கு பொறுப்புள்ளது. ஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்

டுவந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும். அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போரா ட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்றார்.