ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் மரணம்!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் மற்றும் க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்{ பாண்டியா மாரடைப்பால் உயிரிழந்தார்.
தற்போது ஹர்திக் பாண்டியா எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத நிலையில் க்ருனால் பாண்டியா சையது முச்டாக் அலி டி-20 தொடரில் பரோடா கிரிக்கெட் அணி தலைவராக விளையாடி வருகின்றார்.
ஹிமான்{ பாண்டியா தனது மகன்கள் இருவரும் சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட உறுதுணையாக இருந்தவர் ஆவார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது, தனது மகன்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற பல தடைகளை கடந்து வந்ததாகவும், அவர்கள் தற்போது வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஹிமான்{ பாண்டியா கூறியிருந்தார்.