யாழ். மாநகரசபையின் முதல் அமர்வு 26ஆம் திகதி!

வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மையில்லாததால், உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் சபைகளின் முதல் அமர்வு நடைபெற வேண்டியுள்ளது.
இதனால், சபைகளின் முதலாவது அமர்வுகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ். மாநகரசபையின் முதல் அமர்வு வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சபைகளில், உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது அமர்வு நடத்த வேண்டிய நிலையில் 16 சபைகள் உள்ளன. இவற்றின் முதலாவது அமர்வு ஆரம்பமாகும் திகதிகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத, தொங்கு நிலையில் உள்ள சபைகளின் முதலாவது அமர்வில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு செய்யப்படவேண்டும். உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையிலேயே இந்த நிகழ்வு நடைபெறவேண்டும்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 26ஆம் திகதி மு.ப. 9மணிக்கு மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2 மணிக்கு நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பருதித்துறை நகர சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வேலணை பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 29ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு பி.ப. 2மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 2ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு பி.ப. 2மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 3ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 4ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வு அடுத்த மாதம் 5ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி
இதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 5ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு பச்சிலைப் பிரதேச சபையின் சபாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 9ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைத்துறைப்பற்று பிரதே சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 9 ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 18ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. துணுக்காய் பிரதேச சபையின் அமர்வு அடத்த மாதம் 18ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில், வவுனியா நகர சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 16ஆம் திகதி பி.ப. 10 மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அமர்வும் அன்றைய தினம் பி.ப. 2.30 மணிக்கு சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வு அடுத்த மாதம் 17ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் அமர்வு அடுத்த மாதம் 17ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகர சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 10ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2.30மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 11ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முசலி பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப. 2.30 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மாந்தை மேற்கு பிரதே சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 12ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்படாத சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊர்காவற் றுறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதே சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை என்பனவே 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
பூநகரி, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்துறைப் பிரதேச சபையில் ஈ.பி.டி.பியும், வவுனியா தெற்கு சிங்களப் பிரதே சபையில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியும் ஆட்சி அமைக்கவுள்ளன.மேற்படி அரசியல் கட்சிகள் குறித்த சபைகளின் மொத்த ஆசனங்களில் 50 வீதம் அல்லது அதற்கு மேலதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தச் சபைகளின் முதலாவது அமர்வு, மேற்படி கட்சிகளின் செயலர்களால் பெயர் குறிக்கப்பட்ட தவிசாளர் தலைமையில் இடம்பெறும்.