அடிக்கல் நாட்டலுடன் முடிந்துவிடுமா? பல்கலை தூபி விவகாரம் சிறப்புப் பார்வை...

ஆசிரியர் - Editor I
அடிக்கல் நாட்டலுடன் முடிந்துவிடுமா? பல்கலை தூபி விவகாரம் சிறப்புப் பார்வை...

யாழ் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இரவோடிரவாக இடித்து அழிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மனங்களில் ஆறாத் துயரத்தினை ஏற்படுத்தியது.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் நினைவுகளைச் சுமந்த குறித்த நினைவு தூபி ஆனது யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன் காலத்தில் கட்டப்பட்ட நிலையில் இரவோடிரவாக அன்றைய தினம் பெக்கோ இயந்திரம் மூலம் நிர்மூலமாக்கப்பட்டது.

குறித்த நினைவு தூபி இடிக்கப்பட்டமையின் எதிரொலியாக ஜனநாயக வழியில் கட்சி பேதங்களை மறந்து மாணவர்களுடன் சேர்ந்து இரவோடிரவாக போராட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வாயிலின் முன் ஆரம்பித்தன.இறுதிப் போர் முடிவுற்ற 10 வருடங்கள் கடந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட 

மாணவர் போராட்டம் இதுவாக கருதப்படுகின்ற நிலையில் இடிக்கப்பட்ட நினைவு தூபியை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.மாணவர்களின் குறிதத போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் என பலரது ஆதரவும் கிடைக்கப்பெற 

போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற ஆரம்பித்தது.9ஆம் திகதி சனிக்கிழமை பெரிய அளவில் உருமாறிய மாணவர் போராட்டம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் அரசாங்கத்திடமும் இடிக்கப்பட்ட நினை தூபி க்கான நீதியைக் கோரி ஜனநாயக வழியில் போராடினார்கள்.

குறித்த போராட்டத்தை கண்டு அஞ்சிய போலீசார் covid-19 சூழலை காத்திரமாக பயன்படுத்தி போராட்டத்தை நலிவடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.எனினும் தமது இலக்கை சரிவர நிலைநிறுத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி 

சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாரானார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொட்டும் மழையில் தங்குவதற்காக கொட்டகைகள் அமைப்பதற்கு தடை விதித்த போலீசார் மழையைக் கண்டவுடன் போராடும் மாணவர்கள் கலைந்து விடுவார்கள் 

எனத் தப்புக்கணக்கு போட்டார்கள். மலையே இடிந்து விழுந்தாலும் தமது போராட்டத்தை தொடருவோம் என உறுதியாய் நின்ற மாணவர்கள்சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை தொடர்ந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு 

ஆதரவாக யாழ் இந்துவின் மைந்தனும் போராட்டப் பந்தலில் இணைந்து கொண்டான்.குறித்த போராட்டமானது மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் மேம்பட்டு கொலும்புத் தலைநகரிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது மட்டுமன்றி இந்தியாவின் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல் திருமாவளவன் ,வை.கோபாலசமி மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தமது ட்விட்டர் தளங்களில் தமது கண்டனங்களை பதிவு செய்தனர். 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்டபோது யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சற்குணராஜா தான் தனது கடமையை நிறைவேற்றி உள்ளேன் என தெரிவித்தார். துணைவேந்தரை வார கருத்து தெரிவித்த நிலையில் 

இலங்கை பாதுகாப்பு படைகளின் தளபதி சவேந்திர சில்வா மற்றும் இலங்கை பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரும் தமக்கும் பல்கலைக்கழக தூபி அகற்றப்பட்டமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

 இவ்வாறான கருத்துக்களின் பின்னணியில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரான குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி ஏற்பவர்ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகளை ஏற்று இருக்க வேண்டும். 

என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.குருபரன் இத்தகைய பதிவானது ராணுவத் தளபதியின் பதிவையும் மானிய ஆணைக்குழு தலைவரின் பாதிவுகளைத் தாண்டி யாரோ ஒருவருடைய அழுத்தத்தினை துணைவேந்தர் நிறைவேற்றியுள்ளார். 

என எண்ணத் தோன்றுகிறது.10ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் துணைவேந்தரை சந்தித்த பின் மாணவர் மத்தியில் தெரிவித்த கருத்து பல சந்தேகங்களுக்கு நிரந்தர விடை கொடுப்பதாக அமைந்தது.

துணைவேந்தரின் செயற்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது தன்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் போல் அவரது மனம் வெம்ப ஆரம்பித்தது.11ஆம் திகதி நேற்றய தினம் திங்கட்கிழமை மாணவர் போராட்டத்தின் அடுத்தபடியான வடக்கு கிழக்கு தழுவிய முழு கடையடைப்புக்கு

அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இடிக்கப்பட்ட தூபியினை மீள நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவதுற்காக முயற்சிகளை துணைவேந்தர் மேற்கொண்டார்.இடித்தது தனது கடமை என கூறிய துணைவேந்தர் அடிக்கல் நாட்டலுடன் தனது கடமை முடிந்து விடும் என எண்ணினாரோ 

எனத் தோன்றும் அளவுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நடந்து முடிந்துவிட்டது.ஆடுபுலி ஆட்டம் வரவேற்பு வந்தது என பலர் நினைத்திருப்பார்கள் தூபி கட்டி முடிந்துவிடும் என பலர் எண்ணியிருப்பார்கள் ஆனால் யாரோ நினைத்த விடயம் சரியாக நடந்து முடிந்துவிட்டது.

போராடும்போது இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள் இலக்கை எட்டிப்பிடித்துவிட்டோம் எனக் கருதுவார்கள் ஆயின் இனி நடைபெறப்போகும் செயற்பாடுகள் அதற்கான விடைகளை கொடுக்கும்.அடிக்கல் நாட்டுடன் தனது கடமைகள் முடிந்து விட்டன என துணைவேந்தர் கூறப்போகிறாரா? 

ல்லது சம்பிரதாயமாக வெள்ளைப் பேப்பரில் பதவி முத்திரை பொறித்து அனுமதி தாருங்கள் என மேலிடத்தில் கேட்கப் போகிறாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு