இங்கிலாந்து தொடரில் மீண்டும் மெத்தியூஸ்!! -இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்து தொடரில் மீண்டும் மெத்தியூஸ்!! -இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது-

இங்கிலாந்துக்கு எதிராக நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இலங்கை அணியை கிரிக்கெட் நிர்வாகம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூசுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடை எலும்பு காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் கடைசி டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட மெத்தியூஸ், நுவான் பிரதீப், ரூசென் சில்வா மற்றும் லக்சன் சண்டகன் ஆகியோருடன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Radio