ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 பேர் விடுதலை..! சற்றுமுன் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் மட்டக்களப்பு நீதிமன்றினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் 

மட்டக்களப்பில் சென்மேரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதானையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பிள்ளையானிற்கும் மேலும் நால்வருக்கும் எதிராக 

வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பில் 2015 இல் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானிற்கு கடந்த வருடம் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

Radio