வவுனியா கொத்தணியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி..! 19 கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

வவுனியா - பட்டானிச்சூர் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் மாவட்டத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கமைய, A9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெலுக்குளம் பொலிஸ் நிலையம்,

பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளன.

Radio