SuperTopAds

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை தமது ஆழுகைக்குள் வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை..! எம்மால் பராமரிக்க முடியும் என முதல்வர் மணிவண்ணன் மறுப்பு..

ஆசிரியர் - Editor I

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசின் ஆழுகைக்குள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் நிராகரித்திருப்பதுடன், 

யாழ்.மாநகரசபையினால் அதனை நிர்வகிக்க முடியும். எனவும் அதற்கான ஆளணியை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த கலாச்சார மண்டபத்தை விரைந்து திறப்புது குறித்த கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைபெற்றது. 

கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், இந்திய துணைத் தூதுவர், வடமாகண ஆளுனர் திருமதி சார்ள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் T. ஜெயசீலன், 

யாழ்.அரசாங்க அதிபர் மகேசன் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள். இதில் யாழ் மாநகர சபையினால் குறித்த கலாச்சார மையத்தை பராமரிக்க முடியாது. என்றும் அதனால் அதனை மத்திய அரசின் ஆளுகைக்கு எடுப்பது தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

இதன்போது யாழ் மாநகர முதல்வர் இதனை யாழ் மாநகர சபையினால் பராமரிக்க முடியும் என்றும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக எடுப்பதாகவும் கூறினார். குறித்த கலாச்சார மையத்தை நிர்வகிப்பதற்குரிய ஆளணியை விரைந்து உருவாக்கி தருமாறு

மணிவண்ணனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பின்னர் இதே போல கொழும்பில் உள்ள தாமரைத் தடாக கட்டட தொகுதி எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதையும் முதல்வரும் ஆணையாளரும் நேரில் சென்று ஆராய்ந்தனர்.