யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 149.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு..! காற்றுடன் கூடிய கனமழை தொடரும்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 149.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். 

நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி 

மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் வடபகுதியில் 100 மில்லி மீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் 

குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு கடல் தொழிலுக்குச் செல்வோர், 

தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு