11ம் திகதி வடகிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்தேசிய கட்சிகள், சர்வமத தலைவர்கள், மாணவர் ஒன்றியம் அழைப்பு..! இழி செயலை கண்டித்து...

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிக்கப்பட்டமை மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் நினைவேந்தலுக்கு விதிக்கப்படும் தடைகளை கண்டித்து எதிர்வரும் 11ம் திகதி வடகிழக்கில் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் கூடிய தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளும், பல்கலைகழக மாணவர் ஒன்றியம், போரினால் பாதிக்கப்பட்ட உறவுகள், சர்வமத தலைவர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். 

இதன்போது பல்கலைகழக துணைவேந்தரின் செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனம் தொிவிக்கப்பட்டதுடன், போர் காலத்தில் இருந்த துணைவேந்தர்களை விடவும் அதிக அழுத்தத்தையா தற்போதைய துணைவேந்தர் எதிர்கொள்கிறார்? என கேள்வி எழுப்பபட்டதுடன், 

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான நினைவிடத்தை அழித்து இழிநடத்தையை வெளிப்படுத்திய துணைவேந்தருக்கு கண்டனங்கள் கூறப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு