தென்னிலங்கை சுற்றுலா பயணிகளுக்காக யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானில் உச்சி வெய்யிலில் காத்திருந்த பொதுமக்கள்..! அதிகாரிகள் மௌன விரதம்..

ஆசிரியர் - Editor I
தென்னிலங்கை சுற்றுலா பயணிகளுக்காக யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானில் உச்சி வெய்யிலில் காத்திருந்த பொதுமக்கள்..! அதிகாரிகள் மௌன விரதம்..

யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு செல்வதற்காக சென்றிருந்த மக்களுடன் குமுதினி படகு தென்னிலங்கை சிங்கள சுற்றுலா பயணிகளுக்காக 35 நிமிடங்களுக்கும் மேலாக உச்சி வெய்யிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

இன்றைய தினம் காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு செல்வதற்காக பயணிகள் குமுதினி படகில் ஏற்றியபோதும் படகு புறப்படாமல் நின்றுள்ளது. இதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் சிலர் 

வருவதற்காக சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக உச்சி வெய்யிலில் பயணிகள் காத்திருந்தனர். குறித்த சம்பவம் நடைபெற்றபோது பொதுமக்களுடன் அதிகாரிகள் பலர் இருந்தபோதும் அவர்கள் மௌனிகளாக இருந்ததை காண கூடியதாக இருந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு