இளம் வயதில் அரைசதம்!! -சிப்மான் கில் சாதனை-

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரான சிப்மான் கில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அரைசதம் அடித்து இளம் வயதில் சாதனை புரிந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் விளையாடிய சிப்மான் கில் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 45 ஓட்டங்களை பெற்றார். 2 ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றார்.
இதனால் சிட்னி போட்டியிலும் இடம்பிடித்தார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 ஓட்டங்களுடுன் வெளியேறினார்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஆசிய கண்டத்திற்கு வெளியில் இளம் வயதில் அரைசதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.