இன்று தொடங்கிய 3ஆவது டெஸ்ட்: மழையால் இடைநிறுத்தம்!! -அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது-

ஆசிரியர் - Editor II
இன்று தொடங்கிய 3ஆவது டெஸ்ட்: மழையால் இடைநிறுத்தம்!! -அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது-

இந்திய – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான 3 ஆவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் நாணயசுழல்ச்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இதன்படி, இந்திய அணி பந்து வீசுகிறது.

அவுஸ்திரேலியா அணியின் சார்பில் வார்னர் மற்றும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 5 ஓட்டங்கள் எடுத்திருந்தபொழுது, சிராஜ் பந்து வீச்சில் புஜாராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி 14 ஓட்டங்களும், லபுஸ்சேன் 2ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி 7.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிப்படைந்து உள்ளது.


Radio